24.8 C
Jaffna
January 8, 2025
Pagetamil
சினிமா சின்னத்திரை

செல்லம் சார் கதாபாத்திரம்- எதிர்பாராமல் வந்த விஸ்வரூப வெற்றி!

மனோஜ் பாஜ்பாயி மற்றும் சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள தி பேமிலி மேன் சீரிஸின் இரண்டாம் பாகத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த சீரிஸ் இடம் பெற்ற செல்லம் என்ற கதாபாத்திரம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. ஒரு சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டுள்ளது. நடிகர் உதய் மகேஷ் இந்த சீரிஸில் செல்லம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது நடிகர் உதய் மகேஷ் சமீபத்தில் கலந்துகொண்ட நேர்காணலில் செல்லம் கதாபாத்திரம் குறித்து மனம் திறந்துள்ளார்.

“முதலில் தி ஃபேமிலி மேன் சீரிஸில் தீபன் என்ற கதாபத்திற்காகத் தான் ஆடிஷனில் கலந்துகொண்டேன். ஆனால் அந்தக் கதாபாத்திரம் எனக்குக் கிடைக்கவில்லை. பின்னர் சில மாதங்களுக்குப் பிறகு, சீரிஸின் குழுவினரிடமிருந்து எனக்கு செல்லம் சார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஃபேமிலி மேன் சீசன் 1 மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், 2-வது சீசனில் நடிக்க விரும்பினேன்.

செல்லம் சார் கதாபாத்திரம் இவ்வளவு பிரபலமடையும் என்று தான் எதிர்பார்க்கவில்லை. பார்வையாளர்கள் விரும்புவதை இயக்குனர்கள் கணித்துவிட்டால் ஒவ்வொரு படமும் வெற்றி தான். ஆனால் அது சாத்தியமில்லை. நம் வேலை மீது நாம் நம்பிக்கை வைத்து முயற்சி செய்ய வேண்டும். மீதியை மக்கள் பார்த்துக் கொள்வர்.” என்று தெரிவித்துள்ளார்.

கில்லி படத்தில் பிரகாஷ் ராஜ் பயன்படுத்திய பிறகு செல்லம் என்ற வார்த்தை பிரபலமானது குறிப்பிடத்தக்கது. சீரிஸில் செல்லம் என்பது அந்தக் கதாபாத்திரம் உண்மையான பெயர் இல்லை என்றும் உதய் தெரிவித்துள்ளார்.

நடிகர் உதய் மகேஷ், ‘ஆபிஸ்’ சீரியலில் விஸ்வநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அவர் நாளை, சக்ரவியூகம் என்ற இரு படங்களையும் இயக்கியுள்ளார். மூடர் கூடம் முதல் நேர்கொண்ட பார்வை வரை பல படங்களில் அவர் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10இல் ரிலீஸ்

Pagetamil

நடிகர் விஷாலுக்கு உடல்நல பாதிப்பு – பிரச்சினை என்ன?

Pagetamil

Leave a Comment