கொக்குவிலில் மீன் வியாபாரிகள் கைது!

Date:

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் மீன் வியாபாரம் செய்த ஆறு வியாபாரிகள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போதைய பயணத்தடை காலத்தில் நடமாடும் வியாபாரத்துக்கு மட்டுமே அனுமதியளித்துள்ள நிலையில் தேவையற்ற வகையில் மக்களை ஒன்று திரட்டி மீன் வியாபாரம் செய்தனர் என்ற குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அத்துடன் அவர்கள் வியாபாரத்துக்கென வைத்திருந்த மீன்கள் மற்றும் அது சம்பந்தமான வியாபார பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நல்லூர் பிரதேச சபையினால் ஏற்கனவே இவ்வாறான வியாபார நடவடிக்கைகளை மக்களை திரட்டி செய்ய வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும் தொடர்ச்சியாக குறித்த பகுதியில் வியாபாரம் மேற்கொண்ட நிலையில் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

“எம்.எஸ்.வி முதல் அனிருத் வரை பாடிய கானகோகிலம்” – எஸ்.ஜானகி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பாடகரான எஸ்.ஜானகி மறைவுக்கு முன்னாள் முதல்வரும் திமுக...

திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி மறைவு

இந்திய திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி காலமானார். அவருக்கு வயது 88....

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்