யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை – ரசிகர்களிடம் சீறிய வனிதா!

Date:

4வது திருமணத்தை பற்றி கேள்வி எழுப்பிய ரசிகரை நடிகை வனிதா வெளுத்து வாங்கியுள்ளார்.

தமிழ் திரையுலகில் சர்ச்சை நாயகியாக வலம் வருகிறார் ‌நடிகை வனிதா. திருமணம் என்ற வார்த்தையை சொன்னாலே அது வனிதாவுக்கு அலர்ஜியாகி விடுகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை வனிதா, நான்காவது திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியானது. வட இந்தியாவை சேர்ந்த ஒரு விமானியுடன் காதல்‌ விழுந்து, கொல்கத்தாவில் இருவரும் திருமணம் செய்துக் கொண்டதாகவும் தகவல் பரவியது.

ஆனால் இந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்த வனிதா, ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டிருந்தார். அதில் வதந்தியை நம்பவேண்டாம் என்றும்,நான் இன்னும் சிங்கிள்தான் என்றும் கூறியிருந்தார்.அதோடு ‘அவைலப்பிள்’ என்ற வார்த்தையை குறிப்பிட்டிருந்தார். இதற்கு ரீட்விட் செய்த ரசிகர் ஒருவர், வதந்திகள் ஒருநாள் உண்மையாகும். அப்போது என் வாழ்க்கையில் யாரும் தலையிட வேண்டாம்‌ . இதனால் நானும், என் மகள்களும் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறுவார் என வனிதாவை கலாய்த்து பதிவிட்டிருந்தார்.

இதைப் பார்த்து செம டென்ஷான வனிதா, அந்த நபர் வறுத்தெடுத்துவிட்டார். தற்போது அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வனிதா, அப்படி நடந்து, நானும் என் மகள்களும் மகிழ்ச்சியாக இருந்தால், உங்களுக்கு என்ன. நான் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என கொந்தளித்தார். மேலும், நீங்கள் முட்டாள்தனமாக பேசாதீர்கள்.உங்கள் வேலையை பாருங்கள் என அந்த நபரை தெறிவிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

“எம்.எஸ்.வி முதல் அனிருத் வரை பாடிய கானகோகிலம்” – எஸ்.ஜானகி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பாடகரான எஸ்.ஜானகி மறைவுக்கு முன்னாள் முதல்வரும் திமுக...

திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி மறைவு

இந்திய திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி காலமானார். அவருக்கு வயது 88....

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்