26.8 C
Jaffna
December 15, 2024
Pagetamil
மருத்துவம் லைவ் ஸ்டைல்

புளிய மர இலைகளை பற்றி இந்த நன்மைகள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?

புளிய மரங்கள் சாலையோரங்களில் நிறைய இருக்கின்றன. இந்த புளிய மர இலைகளுக்கு பல நன்மைகள் உண்டு. இந்த புளிய மர இலைகளைக் கொண்டு செய்யப்படும் ஒரு ஆண்டிசெப்டிக் அதாவது கிருமிநாசினி பல அற்புதமான மருத்துவ பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.

உடலில் ஏற்படும் வெட்டுக்காயங்கள், ஒவ்வாமை, தோல் நோய்த்தொற்றுகள், ஆகியவற்றிற்கு இதை கிருமிநாசினியாக பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல் இயற்கையாகவே இந்த புளிய மர இலைகளுக்கு காயங்களுக்கு சிகிச்சையளிகும் மற்றும் குணப்படுத்தும் பண்பு உள்ளது.

இந்த பதிவில் புளிய மர இலைகளைக் கொண்டு இந்த கிருமி நாசினியை எப்படி தயார் செய்வது என்பதை தெரிந்துக்கொள்ளலாம். இந்த கிருமி நாசினியை தயார் செய்ய நமக்கு புளிய இலைகள், வேம்பு இலைகள், தண்ணீர் ஆகியவை இருந்தாலே போதும். புளிய இலைகள் மற்றும் வேப்ப இலைகள் ஆகியவற்றை தலா 150 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். அதோடு 1 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள்.

செய்முறை:
  • ஃப்ரெஷான புளிய இலைகள் மற்றும் வேப்ப இலைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
  • அகலமான பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதி வந்ததும், இரண்டு இலைகளையும் ஒன்றாக அதில் போட்டுவிடுங்கள்.
  • இலைகள் நிறம் மாறும் வரை நீரின் நிறமும் வெளிர் பச்சை நிறமாக மாறும் வரை கொதிக்க வைக்கவும்.
  • மேற்சொன்ன படி அந்நிறம் வந்துவிட்டால், அடுப்பை அணைத்துவிட்டு குளிர விடவும். இந்த நீரை கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.

வேம்பு மற்றும் புளிய மர இலைகள் இரண்டும் சக்திவாய்ந்த கிருமி நாசினி பண்புகளைக் கொண்டுள்ளன, மேலும் அவை காயங்களை விரைவாக குணப்படுத்த உதவுகின்றன. புளிய இலைகள் பெரும்பாலும் சமையலிலும் கூட பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில், வலி ​​வீக்கங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் காயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் இதைப் பயன்படுத்துகிறோம். புளிய மரத்தின் இலைகள் ஒரு தனித்துவமான வாசனை மற்றும் புளிப்பு சுவை கொண்டவை. புதிய இலைகளை குளிர்சாதன பெட்டியில் சேமித்து ஒரு வாரம் பயன்படுத்தலாம்.

வேம்பு கிருமி நாசினி என்பது அனைவருக்கும் தெரியும், ஏனெனில் தோல் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்க வேப்ப இலைகளைத் தான் பயன்படுத்துகிறோம். வேப்பமரத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒரு மருத்துவ பண்புகளைக் கொண்டது என்பதை நம் வீட்டில் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம்.

எனவே இந்த இரண்டு இலைகளையும் கொண்டு கிருமி நாசினி தயார் செய்து பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.

காயங்கள் குணமாக காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் தவறாமல் இந்த கிருமி நாசினியைப் பயன்படுத்த முயற்சிக்கவும். மீதமுள்ள திரவத்தை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்து 2 முதல் 3 முறை வரை பயன்படுத்தலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

Leave a Comment