நடிகர் அமீர்கானின் மகன் புதிய படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமாக உள்ளார்.
பெரிய நடிகர்களின் வாரிசுகளும் திரைத்துறையில் நடிகர்களாக களமிறங்குவது காலங்காலமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகர் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகன் ஜுனைத் கான் பாலிவுட்டில் புதிய படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார். மகாராஜா என்ற படத்தின் மூலம் அவர் நடிகராக அறிமுகமாகிறார்.
விறுவிறுப்பாக நடந்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் படத்தை முடிக்க படக்குழுவினர் தீவிரம் காண்பித்து வருவதால் படப்பிடிப்பை அரசு அனுமதியுடன் நடத்துவதற்காக நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு பிசிஆர் டெஸ்ட் எடுத்துள்ளனர் .
மேலும் படக்குழுவினர்கள் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட நடிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் மட்டுமே படப்பிடிப்பில் அனுமதிக்கப்பட உள்ளனராம்.
ஜூனைத் கான் இந்த படத்தில் பத்திரிகை நிருபராக நடிக்கிறார். ஷாலினி பாண்டே, ஸலவாத் சரிவா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சித்தார்த் மல்ஹோத்ரா இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த படம் 1862-ல் நடந்த மகாராஜா லிபல் வழக்கை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.