சுஷாந்த் சிங் பயோபிக் திரைப்படத்தை வெளியிட தடையில்லை என நீதிமன்றம் கூறியுள்ளதால் படகுழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
முன்னாள் கிரிக்கெட் கேப்டன் டோனியின் பயோபிக்கில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இளம் நடிகராக இருந்த சுஷாந்த் சிங், குறுகிய காலத்தில் மிகப்பெரிய புகழை அடைந்தார். முன்னணி நடிகர்களுக்கே சாவலாக இருந்த சுஷாந்த், கடந்த ஆண்டு மும்பையில் உள்ள தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணம் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்னும் இவரின் மரணம் மர்மமாக உள்ள நிலையில் தற்போது மறைந்த சுஷாந்தின் சிங்கின் வாழ்க்கை வரலாறு ‘நய்யே தி ஐஸ்டிஸ்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. திலீப் குலாட்டி இயக்கியுள்ள இப்படத்தில் சுஷாந்த் சிங்கின் கதாபாத்திரத்தில் ஜூபர் கான் நடித்துள்ளார்.
இந்த படத்தை வரும் ஜூன் 11-ந் திகதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் படத்தை வெளியிடக் கூடாது என சுஷாந்தின் தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை கடந்த 4ம் திகதி விசாரித்த நீதிமன்றம், படத்திற்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, சுஷாந்தின் தந்தை தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் தெளிவாக இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும் இந்த படத்தை வெளியிட தடையில்லை என நீதிமன்றம் அறிவித்தது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.