சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தைவான் மக்களுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தற்போது தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தடுப்பூசிகளை அதிக அளவில் கையிருப்பு வைத்திருக்கும் நாடுகள் பிற நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கி உதவி செய்து வருகின்றன. அந்த வகையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தைவான் நாட்டு மக்களுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
தைவான் உள்நாட்டு நோய்தொற்று அதிகரிப்பில் கடுமையாக போராடி வருகிறது. இதையடுத்த சீனா ஜனநாயக ரீதியாக தைவான் தீவுக்கு தடுப்பூசிகளை அனுப்ப பலமுறை முன்வந்துள்ளது. ஆனால் சீன தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளதோடு அவற்றைப் பயன்படுத்தவும் அந்நாடு அனுமதிக்கவில்லை. தைவானின் 23.5 மில்லியன் மக்களில் 3% மட்டுமே குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சீனாவின் சலுகை பல தைவானியர்களை கவர்ந்திழுக்க வாய்ப்பில்லை என்றும் கடந்த மாதம் தைபேயின் தேசிய செங்கி பல்கலைக்கழகத்தின் கருத்துக் கணிப்பில் பெரும்பாலான மக்கள் சீன தடுப்பூசி பெற தயாராக இருக்க மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது சிலருக்கு கவர்ச்சிகரமானதாக இருக்கலாம், ஆனால் பலரால் செலவுகளைச் சமாளிக்க முடியாது என்பதுதான் பிரச்சினை என்று ஓரு தைவான் அதிகாரி கூறியுள்ளார். தைவானுக்கும் சீனாவிற்கும் இடையில் பயணம் செய்யத் தேவையான தனிமைப்படுத்தலின் வாரங்கள் மற்றும் செலவுகளை அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.