Pagetamil
உலகம்

எரிபொருள் தேவையில்லை ;பறக்கும் டாக்சியை அறிமுகப்படுத்திய ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம்!

பறக்கும் டாக்சி சேவையை அமெரிக்காவின் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

எரிபொருள் இல்லாமல் முற்றிலும் மின்சார பேட்டரியால் இயங்கும் குட்டி விமான டாக்சினை அமெரிக்காவில் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மேக்கர் என பெயரிடப்பட்டுள்ள இந்த விமான டாக்சியின் சிறப்பு அம்சங்கள் குறித்து கலிபோர்னியாவில் விளக்கப்பட்டது.

முற்றிலும் பேட்டரியால் இயங்குவதால் சுற்றுச்சூழலுக்கு இது தீங்கு ஏற்படுத்தாது. ஹெலிகாப்டர் போன்ற வாகனத்தில் செங்குத்தாக மேல் எழும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மேக்கர், பின்னர் விமானம் போன்று பறக்கும் திறனுடையது. மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த குட்டி விமானத்தை முதல் கட்டமாக 100 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள நகரங்களுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

50 கிலோ மீட்டர் தூர பயணத்திற்கு கட்டணமாக இந்திய மதிப்பீட்டில் சுமார் 4000 ரூபாய் வசூலிக்க ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் 2024 ம் ஆண்டு தான் இந்த பறக்கும் டாக்சி பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4 பேர் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள மேக்கர் விமானத்திற்கு அனுமதி கோரி அமெரிக்க விமானத்துறைக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கும் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம், சில மாதங்களில் அனுமதி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

Pagetamil

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

east tamil

பிரான்ஸை உலுக்கிய பாலியல் வல்லுறவு வழக்கு: சொந்த மனைவியை கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய கணவன், 50 ஆண்களுக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

துரோகம் செய்த காதலி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை: காதலனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு!

Pagetamil

12 முறை விவாகரத்து செய்து… இணைந்த தம்பதி: 13வது முறை அரசாங்கமே கடுப்பானது!

Pagetamil

Leave a Comment