25.6 C
Jaffna
December 16, 2024
Pagetamil
லைவ் ஸ்டைல்

இந்த உணவுகளை எல்லாம் குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாது!

இன்று நாம் குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாத உணவுகளைப் பற்றி தெரிந்துகொள்வோம். உணவுகள் கெட்டுப்போகாமல் இருக்க தான் நாம் குளிர்சாதன பெட்டிகளை வாங்கவே செய்தோம். ஆனால், இப்போதோ நிலைமை என்னவென்றால் ஏதேனும் பழங்கள் அல்லது காய்கறிகளை வாங்கினால் அதை அப்படியே குளிர்சாதன பெட்டியில் வைத்துவிடுகிறோம். அதுவும் இந்திய மக்கள் வீட்டில் வைக்கும் குழம்பு வகைகள் அனைத்தையும் குளிர்சாதன பெட்டியிலேயே அடைக்கின்றனர்.

ஆனால், அப்படி வைப்பது நல்லதல்ல. என்னென்ன உணவுபொருட்களை எல்லாம் குளிர்சாதன பெட்டியில் போட்டு வைக்கக்கூடாது ஏன் வைக்கக்கூடாது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

தக்காளி

தக்காளியைக் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்தால் அதன் முழுமையான சுவை கிடைக்காமல் போகும். தொடர்ந்து பல நாட்கள் தக்காளியைக் குளிர்சாதன பெட்டியில் வைத்தால் அதன் சத்துக்களும் இழக்க நேரலாம்

வாழைப்பழங்கள்

வாழைப்பழங்கள் பழுக்க மிதமான வெப்பநிலை தேவை. இருப்பினும், அவற்றை காயாகவே வைத்திருக்க விரும்பினால் அவற்றை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். ஆனால் பழுத்த பிறகு குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது.

தர்பூசணி

தர்பூசணியை ஃப்ரெஷாக சாப்பிட வேண்டும். அதை வெட்டி உங்கள் குளிர்சாதன பெட்டியில் மிக நீண்ட நேரம் வைத்தால் அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை இழக்கும்.

கத்திரிக்காய்

கத்தரிக்காய்கள் வெப்பநிலை உணர்திறன் கொண்ட காய்கறிகளாகும், மேலும் குளிர்சாதன பெட்டியில் நீண்ட காலம் வைத்தல் கூடாது. 10 ° C க்கும் குறைவான வெப்பநிலை அதன் அமைப்பையும், கத்தரிக்காயின் சுவையையும் சேதப்படுத்தும். அறை வெப்பநிலையில் அவற்றை சேமிக்க வேண்டும் மற்றும் பிற பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து விலக்கியே வைக்க வேண்டும்.

தேன்

தேன் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? | Health News in Tamil

தேன் பல ஆண்டுகள் ஆனாலும் கெடாது. அதை குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் அது கடினமடைந்து சாப்பிட முடியாததாகிவிடும். உண்மையான தேனைப் பொறுத்தவரை, அதை காலவரையின்றி அப்படியே வைத்திருக்க முடியும். அது கெட்டுப்போகாது

பூண்டு

குளிர்சாதன பெட்டியில் பூண்டை வைக்கக்கூடாது. இதை காற்றோட்டமாக தான் வைத்திருக்க வேண்டும். திறந்தவெளியில் ஒரு மாதத்திற்கும் மேலாக கூட வைத்திருக்கலாம்.

உருளைக்கிழங்கு

குளிர்ந்த, வறண்ட இடத்தில் சேமிக்கப்படும் போது உருளைக்கிழங்கு நன்றாக ருசிக்கும். அவை பயன்படுத்தப்படுவதற்கு முன்பு கழுவ வேண்டிய அவசியமில்லை. குளிர்சாதன பெட்டியில் உள்ள வெப்பநிலையால் இதில் உள்ள ஸ்டார்ச் சேதமடையக்கூடும். அதுமட்டுமில்லாமல் நீண்ட கால உருளைக்கிழங்கை அடுப்பில் வைத்தால் சமைக்கும் போது தோல் கருமையாகக்கூடும். எனவே அதை குளிரூட்டியில் வைக்கக்கூடாது.

முலாம்பழம்

தர்பூசணியைப் போலவே, முலாம்பழத்தையும் வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. அறை வெப்பநிலையிலேயே சேமிக்க வேண்டும்.

ஒரஞ்சு

சிட்ரஸ் பழங்கள் மிகவும் அமிலத்தன்மை கொண்டவை மற்றும் அதிக குளிர்ச்சியான வெப்பநிலையால் சேதமடையும். குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கும்போது அதன் தோல் சுருங்கும். ஆரஞ்சு ஒரு அடர்த்தியான, கடினமான தோலைக் கொண்டிருப்பதால், அவை வெப்பமான சூழலில் நன்றாக இருக்கும்.

இதே போல, முட்டை, சாக்லேட், துளசி, வெங்காயம், ஸ்ட்ராபெர்ரி, வெள்ளரிக்காய், காபி கொட்டை, காபி பொடி, ரொட்டி, கடலைக்காய், சமையல் எண்ணெய் வகைகள், கெட்ச்அப் போன்றவற்றை குளிர் சாதன பெட்டியில் வைக்கக்கூடாது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment