சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பிரதேசத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய இருவர் ஊர்மக்களால் நையப்புடைக்கப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தொம்பை வீதியிலுள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் இன்று காலை இரண்டு திருடர்களும் நுழைந்து, நீர் இறைக்கும் மோட்டாரை திருட முற்பட்டுள்ளனர்.
வீட்டு கதவை கழற்றிக் கொண்டு உள்நுழைந்த இருவரும், நீர் இறைக்கும் மோட்டாரை கழற்ற முயன்றனர்.
இதை அவதானித்த வீட்டு பெண் சத்தமிட்டுள்ளார்.
திருடர்கள் இருவரும் தப்பியோட முயன்ற போதும், பிரதேச இளைஞர்கள் வளைத்து பிடித்தனர்.
இருவரையும் கட்டி வைத்து நையப்புடைத்தனர். அவர்கள் இருவரும் ஓட்டுமடத்தை சேர்ந்தவர்கள்.
பின்னர், சுன்னாகம் பொலிசாரிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.
பொலிசார் நடத்திய விசாரணையில், இருவருக்கும் பல திருட்டுடன் தொடர்பிருப்பது தெரிய வந்தது.



