இலங்கை

இந்தியாவிலிருந்து கடலால் வந்து முள்ளியவளையில் தங்கியிருந்தவர் கைது!

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்குள் வந்து, முள்ளிவளை பகுதியில் தங்கியிருந்த ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டு, கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சென்னைக்கு சென்றஅந்த நபர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின், நாகப்பட்டினம் பகுதியில் வசித்து வந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

36 வயதான ஒருவரே கைதாகியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து, மார்ச் 12 ஆம் திகதி படகு மூலம் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக பொலிசார் கூறுகின்றனர்.

சந்தேக நபர் தொடர்பாக ராணுவ இஉளவுத்துறையினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த கைது செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் குடிவரவு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் இன்று (11) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

திருநெல்வேலி பொதுச்சந்தை மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டது!

Pagetamil

வேலைவாய்ப்பு செய்தி: நீர்ப்பாசன அமைச்சில் விண்ணப்பம் கோரப்பட்டது!

Pagetamil

முல்லைத்தீவு வந்தார் வீரசேகர!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!