முகக்கவசம் அணியச் சொன்ன பி.எச்.ஐ மீது இளைஞன் தாக்குதல்!

Date:

வவுனியா சாந்தசோலைப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதாரபரிசோதகர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சுகாதாரபரிசோதகர் நேற்றயதினம் மாலை சாந்தசோலைப்பகுதியில் கடமை நிமித்தம் சென்றிருந்தார்.

இதன்போது முககவசத்தை சீரான முறையில் அணியாமல் வீதியால் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். இதன்போது அதனை சீராக அணியுமாறு சுகாதார பரிசோதகர் எச்சரித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த இளைஞர் சுகாதார பரிசோதகரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்து சுகாதார பரிசோதகர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட வரை வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

உக்ரைனை கடுமையாக சாடிய ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், xக்டோபர் 18 அன்று தனது சமூக...

பொலிஸ் அதிகாரியின் காரை பறிமுதல் செய்த FCID

கோட்டவில காவல் நிலையத்தின் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றும் பெண் தலைமை...

இலங்கையில் புதிய போக்குவரத்துப் புரட்சி! பயணிகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன் சேவை விரைவில் ஆரம்பம்

தெற்காசியாவின் முதலாவது பயணிகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்