31.3 C
Jaffna
March 28, 2024
முக்கியச் செய்திகள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் பிளாஸ்டிக் கழிவுகள் மன்னாரிலும் கரையொதுங்கின!

அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து கடலில் விழுந்த ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் இன்று வியாழக்கிழமை (10) காலை மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக வங்காலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்காலை பொலிஸ் நிலைத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பிலேயே மேற்படி சிறிய பிளாஸ்ரிக் உருண்டைகள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறிய உருண்டைகள் கடற்கரையேரங்கள் முழுவதிலும் சிதறிக் கிடப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன் குறித்த பகுதிக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் நேரடியாக சென்று கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்ரிக் பொருட்கள் தொடர்பாக பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும் அரிப்பு பகுதியிலும் குறித்த பிளாஸ்ரிக் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.

பிளாஸ்ரிக் தயாரிப்பிற்கான சிறிய உருண்டைகள் கப்பலில் இருந்து கடலில் கொட்டப்பட்டு, நீர்கொழும்பை அண்டிய பகுதிகளில் கரையொதுங்கியது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மைத்திரி இன்று சிஐடியில் வாக்குமூலம்!

Pagetamil

Leave a Comment