25.8 C
Jaffna
March 5, 2025
Pagetamil
லைவ் ஸ்டைல்

சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்!

தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை பச்சையாக உண்ணும் போது கிடைக்கக்கூடிய நன்மைகளை பற்றி தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். சின்ன வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், புரதம், இரும்புச்சத்து, மினரல்கள், வைட்டமின் மற்றும் பொட்டாசியம் என்று ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. பெரிய வெங்காயத்தை காட்டிலும் சிறிய வெங்காயத்தில் தான் சத்துக்கள் அதிகம்.

அதே போல சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது தான் அதன் முழு மருத்துவ பயன்கள் நமக்கு கிடைக்கும். அதனால் முடிந்த அளவு சின்ன வெங்காயத்தை பச்சையாக எடுத்து கொள்வது மிகவும் நல்லது. தினமும் ஒரு சின்ன வெங்காயம் எடுத்து கொள்ளும் போது இரத்த நாளங்களில் இருக்கும் அடைப்பை ஏற்படுத்தக் கூடிய கொழுப்பை கரைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

அதிகமான அளவு யூரிக் அமிலம் சேருவதன் காரணமாக தான் நமக்கு சிறுநீரக கற்கள் உண்டாகிறது. இதற்கு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வரும்போது யூரிக் அமிலத்தால் ஏற்படும் கற்கள் கரைந்து விடும். முதுமையில் ஏற்படும் மூட்டு வலி, முதுகு வலி மற்றும் இடுப்பு வலிக்கு சின்ன வெங்காயத்தை தொடர்ச்சியாக எடுத்து வரும்போது இது போன்ற பிரச்சனைகள் வராது.

காலநிலை மாற்றத்தால் ஒரு சிலருக்கு இருமல், நெஞ்சு சளி, நுரையீரலில் அலர்ஜி, மூக்கடைப்பு போன்ற தொல்லைகள் வரும். அதற்கு இரவு தூங்கும் முன்பு தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு விட்டு படுக்கும் போது இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். பல் வலி மற்றும் ஈறு வலி உண்டாகும் போது ஒரு சின்ன வெங்காயத்தை வெறும் வாயில் போட்டு மென்றாலே வலி குறைந்து விடும். அது மட்டுமல்ல வாய்துர்நாற்றம் வராமலும் இது தடுக்கும்.

இரவு தூங்கும் முன்பு ஒரு சின்ன வெங்காயத்தை சாப்பிடுவதினால் உடல் வலிமை பெறும். நரம்பு தளர்ச்சி பிரச்சனை இருப்பவர்கள் குறிப்பாக இதனை எடுத்து கொள்ளும் போது நல்ல பலன் கிடைக்கும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவு தூங்குவதற்கு முன்பாக சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு இளஞ்சூடு நீரை பருகி வர நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடல்எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. சின்ன வெங்காய சாற்றோடு தேன் கலந்து எடுத்து கொள்ளும் போது மூலம் சம்மந்தமான பிரச்சனைகள் இருக்காது.

செரிமானம் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இருப்பவர்கள் சின்ன வெங்காயத்தை பச்சையாக எடுத்து வந்தால் விரைவில் குணமடையலாம். மேலும் இதனை தொடர்ந்து எடுத்து வரும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எந்த ஒரு நோயும் அவ்வளவு எளிதில் நம்மை நெருங்க முடியாது. ஒரு சிலருக்கு அடிக்கடி மூக்கில் இரத்தம் வழியும். இவர்கள் இரண்டில் இருந்து மூன்று சொட்டு சின்ன வெங்காயம் சாற்றை மூக்கில் விட்டு வர நாளடைவில் அந்த பிரச்சனை குணமாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சமையல் குறிப்புக்கள் – கோவா வடை

Pagetamil

திருகோணமலை ஸ்பெஷல் மாமைற் முறுக்கு

Pagetamil

மட்டக்களப்பு மரக்கறி கூட்டுக்கறி

Pagetamil

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

Leave a Comment