அம்பகமுவ, கொத்மலை சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்!

Date:

நுவரெலியா – அம்பகமுவ சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட பகுதி மற்றும் கொத்மலை சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் வாழ்பவர்களுக்கான கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் பணி இன்று (10) ஆரம்பமானது.

அந்தவகையில், அம்பகமுவ சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள், பொலிஸார், தோட்ட அதிகாரிகள் மற்றும் தோட்ட முன்கள பணியாளர்கள் என 2850 பேருக்கு கினிகத்தேனை மத்திய கல்லூரியில் தடுப்பூசி ஏற்றப்பட்டது.

அத்தோடு, மற்றும் கொத்மலை சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள், பொலிஸார், தோட்ட அதிகாரிகள் மற்றும் தோட்ட முன்கள பணியாளர்கள் என 1066 பேருக்கு கொத்மலை பிரதேச செயலகத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்டது.

இந்த தடுப்பூசி ஏற்றும் பணியை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று நேரடி பயணம் மேற்கொண்டு கண்காணித்தார்.

இந்த கண்காணிப்பில் பிரஜா சக்தியின் பணிப்பாளரும், கொவிட் தடுப்பூசி செயலணியின் பிரதானியுமான பாரத் அருள்சாமி, மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர், நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர், இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

க.கிஷாந்தன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

கோட்டாவின் கூட்டாளியின் புதுப்புது கண்டுபிடிப்புக்கள்!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்...

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்