தற்போது கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எல்லாம் மூடப்பட்டுள்ளன. இதனால் தினமும் “சரக்கு” அடிப்பவர்கள் எல்லாம் “சரக்கு” கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். பொதுவாக குடி என்பது மனிதனை மலுங்கடிக்கும் ஒரு விதமான பானமாகவே கருதப்படுகிறது. இப்படி குடித்துவிட்டு மதி கொட்டவர்கள் செய்யும் விஷயம் பல நேரங்களில் கடுப்பாக இருந்தாலும் சில நேரங்களில் காமெடியாகவும் வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இருக்கும்.
குடி போதையில் அவர்கள் செய்யும் சில விஷயங்கள் நம்மை ரசிக்க வைக்கும் அப்படியான ஒரு விஷயம் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. கையில் மது பாட்டிலுடன் ஒருவர் குடிப்பது குறித்த கவிதை ஒன்றை சொல்கிறார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தள்ளாடும் தமிழ் அழகு! 😜 pic.twitter.com/R0hquJ0dks
— இசை (@isai_) June 7, 2021
அவரின் இந்த கவதையை பார்த்து பலர் வியந்து பகிர்கின்றனர். சிலர் காமெடியாக பார்த்து சிரிக்கின்றனர். ஆனால் இவர் இந்த கவிதையின் மூலம் ஒரு விதமான வலியை கடத்தியிருக்கிறார். இந்த கவிதை வரிகளில் “உழைப்பவர்களின் உரிமத்தை முதலாளி குடிக்கிறான், உலகத்தை வெறுத்தவன் விஷத்தை குடிக்கிறான்” “சத்தியத்தின் பேரு சொல்லி தர்மம் குடிக்குது” போன்ற வரிகள் வாழ்க்கையின் தத்துவங்களை அழகாகவும் எளிதாகவும் சொல்கிறது. அதே நேரத்தில் “குழந்தையாக இருக்கும் போது பாலை குடிக்கிறான், வளர்ந்த பின்னே நாலும் குடிக்கிறான், சாகும் போது மூனுவாய் தண்ணீர் குடிக்கிறான்” என்பது மனித வாழக்கையை அழகாக எடுத்துச் சொல்கிறது. இந்த வீடியோவை திமுகவின் தகவல் தொழிற்நுட்ப அணியின் மாநில துணை செயலாளர் இசை என்பவர் பகிர்ந்துள்ளார்.