கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘லிப்ட்’ திரைப்படம் கவின் ரசிகர்களுக்கு சிறப்பான ட்ரீட் ஆக இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் உறுதியளித்துள்ளது.
அறிமுக இயக்குனர் வினீத் இயக்கத்தில் கவின் நடிப்பில் லிப்ட் திரைப்படம் உருவாகியுள்ளது. லிப்ட் படத்தில் அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஈகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு மைக்கேல் பிரிட்டோ இசையமைத்துள்ளார்.
பிக்பாஸை அடுத்து கவினுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் லிப்ட் படத்திற்கு கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
லிப்ட் படத்தின் தியேட்டர் உரிமையை லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக ரவீந்தர் சந்திரசேகர் வாங்கியுள்ளார். தற்போது லிப்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காது என்று லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் பதிலளித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், “லிப்ட் திரைப்படம் சிறந்த சீட் எட்ஜ் ஹாரர் த்ரில்லர் மற்றும் கவின் ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக அமையும். மேலும் அவரது ரசிகர்களுக்கு இப்படம் ஏமாற்றம் அளிக்காது. இது 200% உறுதி. இயக்குனர் வினீத் சிறப்பாக பணியாற்றியுள்ளாள்ர். படத்தை வெளியிட ஆவலாக இருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து கவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.