நாளாந்தம் அண்ணளவாக 38 பேர் COVID-19 தொடர்பான சிக்கல்களால் உயிரிழக்கிறார்கள். இதில், 28% உயிரிழப்புகள் வீடுகளில் பதிவாகியுள்ளன என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இது ஒரு குறிப்பிடத்தக்க ஆபத்து என்று எச்சரித்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்திலேயே வீடுகளில் அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர். அங்கு 18% உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழ்நிலை மிகவும் முக்கியமானது. வீடுகளில் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயரக்கூடும் என்பதால், பொருத்தமான முடிவுகளை எட்டுவதற்காக நிலைமையைப் மதிப்பீடு செய்யுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
வீடுகளில் கொரோனா வைரஸ் தொடர்பான உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்கத் தவறியது குறிப்பிடத்தக்க கவலையை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.
அறிகுறிகளையுடையவர்கள் மருத்துவமனைகள் அல்லது சிகிச்சை மையங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் அல்லது தனிமைப்படுத்தலின் போது கண்காணிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயை இலேசாக சிந்திக்க வேண்டாம் என்று அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்