Pagetamil
சினிமா

மருத்துவக் கல்லூரி மாணவர் புத்தகம் வாங்க, வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிய சூர்யா!

நடிகர் சூர்யா மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் புத்தகம் வாங்க அவரது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பி உதவியுள்ளது மக்கள் மத்தியில் பாராட்டைப் பற்று வருகிறது.

நடிகர் சூர்யா குடும்பத்தினர் மக்களுக்கு தங்கள் அறக்கட்டளை மூலம் தொடர்ந்து உதவி வருகின்றனர். குறிப்பாக படிப்பிற்காக. அகரம் அறக்கட்டளை மூலம் பல ஆயிரம் மாணவர்கள் படிப்பிற்கு சூர்யா குடும்பத்தினர் உதவியுள்ளனர். முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்குக் கூட சூர்யா குடும்பத்தினர் 1 கோடி ரூபாய் அளித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது திருநெல்வேலியைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவருக்கு புத்தகங்கள் வாங்க, அவரது வங்கி கணக்கில் ரூபாய் 5000 நேரடியாக செலுத்தியுள்ளார் சூர்யா. அவர் பணம் அனுப்பிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய 2D Entertainment நிறுவனம் மூலம் சூர்யா பணம் அனுப்பியுள்ளார். சூர்யா செய்துள்ள இந்த உதவி மாணவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

ஒரு பாடலுக்கு மீண்டும் நடனமாடும் தமன்னா!

Pagetamil

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் – இது ‘ஹாலிவுட்’ லெவல்!

Pagetamil

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா மனு

Pagetamil

‘திருமணமான ஆணுடன் தொடர்பு வைக்க மாட்டேன்’: ஜி.வி.பிரகாஷுடனான உறவை மறுக்கும் நடிகை திவ்யபாரதி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!