தன் 6வயது வளர்ப்பு மகள் ஆங்கில புத்தகத்தை படிக்கவில்லை என வளர்ப்பு தந்தை மகளை பேனாவால் முதுகில் குத்திய கொடூர சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. தற்போது அந்த வளர்ப்பு தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் 6வயது சிறுமியை வளர்ப்பு தந்தை ஆங்கில பாட புத்தகத்தை வாசிக்க தெரியவில்லை என்பதற்காக பேனாவாலேயே முதுகில் குத்தி ரத்த காயம் ஏற்படுத்திய சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.
அந்த சிறுமியின் தாயார் ஏற்கனவே திருமணமாகி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றுவிட்டார். விவாகரத்து பெறும் போது அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். விவாகரத்து பெற்ற அந்த தாய் வேறு ஒருவரை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். அவருடன் வாழ்ந்ததில் இன்னொறு பெண் குழந்தையை பெற்றுள்ளார்.
அதுவரை அவர்களுக்கும் எல்லாம் நன்றாக தான் சென்றுள்ளது. 3 குழந்தைகள் ஆனவுடன் அவரின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திடீரென் தன் மனைவியை அடிப்பது , குழந்தைகளை அடிப்பது என்பதை அவர் வழக்கமாக்கி கொண்டுள்ளார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது 6வயது வளர்ப்பு மகளுக்கு ஆங்கில புத்தகம் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். அதை அவர் தினமும் வாசிக்கும்படி சொல்லியுள்ளார். ஆனால் அந்த 6வயது சிறுமியால் வாசிக்க முடியவில்லை. அதனால் ஆத்திரமடைந்த வளர்ப்பு தந்தை அருகில் உள்ள பேனாவை எடுத்து 6 வயது வளர்ப்பு மகளின் முதுகில் பலமாக குத்தியுள்ளார். அதை கண்ட தாய் அவர் அடிப்பதை தடுக்க முயற்சித்த போதுஅவரையும் இவர் அடித்துள்ளார்.
இதன் பின்பு அந்த தாய் தன் மகள்களுடன் அந்த வீட்டிலிருந்து வெளியேறி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் செய்த பதிவு மிகவும் வைரலாக மாறியது. இதைபார்த்த ஒருவர் தன் நண்பர்களுடன் வளர்ப்பு தந்தையை தேடியுள்ளார். அவர்கள் கடந்த ஞாயிறு அன்று வளர்ப்பு தந்தையை குடி போதையில் இருக்கும் போது பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்தும் போது அந்த வளர்ப்புதந்தை மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக விளக்கமளித்தனர். அவரை தற்போது போலீசார் அவர்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கோர்ட் அளிக்கும் தீர்ப்பை பொறுத்தே அவர் கைது செய்யப்படுவாரா இல்லையா என்பது தெரியவரும்.