நீதித்துறை தொடர்பான பல நியமனங்களுக்கு நாடாளுமன்ற சபை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, ஜனாதிபதி கோதபய ராஜபக்சே தாக்கல் செய்த பரிந்துரைகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் அர்ஜுன ஒபேயசேகர உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சிசிர டி அப்ரூ ஓய்வு பெற்றதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கே.பி. பெர்னாண்டோ மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் வெற்றிடத்திற்கு சசி மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட குடியியல் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த சசி மகேந்திரன், கொழும்பு குடியியல் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.
மேலும், நீதிச் சேவை ஆணைக்குழுவின் வெற்றிடத்திற்கு நீதிபதி எல்.டி.பி தெஹிதெனிய நியமிக்கப்பட்டார், முன்னர் அந்த பதவியில் சிசிர டி அப்ரூ செயற்பட்டிருந்தார்.