தனுஷின் லேட்டஸ்ட் அமெரிக்கப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.தனுஷ் தற்போது தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிறக்கக் அமெரிக்காவில் இருக்கிறார். அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கிய ரஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் திரைப்படம் உருவாகி வருகிறது. அந்தப் படத்தில் ரையன் கோஸ்லிங், கேப்டன் அமெரிக்கா நடிகர் கிறிஸ் எவான்ஸ் உள்ளிட்ட முக்கிய ஹாலிவுட் நடிகர்கள் நடித்து வருகின்றனர். தனுஷும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
எனவே இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்றார் நடிகர் தனுஷ். அங்கு ஒரு மாதம் நடிப்பு பயிற்சி பெற்றுள்ளார். அதையடுத்து படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.
தற்போது தி கிரே மேன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதால் இன்னும் இரண்டு வாரங்களில் தனுஷ் சென்னை திரும்ப உள்ளதாகக் கூறப்படுகிறது.தற்போது தனுஷ் அமெரிக்காவின் ஒரு ஹோட்டலில் உணவருந்தும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை திரும்பியதும் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.