நடிகை ரைசா வில்சன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனாவின் தாக்கம் அதிகமாகி வருவதால் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் சிறிது தயக்கம் இருப்பதால் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. திரைத்துறை பிரபலங்களும் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதுடன் மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
தற்போது நடிகை ரைசா வில்சன் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளார். அப்போலோ கேன்சர் சென்டரில் வைத்து தனது தடுப்பூசியை ரைசா பெற்றுக்கொண்டுள்ளார். அவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியள்ளது.
இதற்கிடையில் ரைசா தற்போது ‘சேஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘ஃஎப்ஐஆர்’ படத்திலும் ரைசா நடித்து வருகிறார்