சட்ட விரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
இன்று அதிகாலை 5.00மணியளவில் யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலில் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மானிப்பாய் சங்கானை சேர்ச் றோட்டில் சட்ட விரோதமாக கசிப்பு காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்தனர்.
தனது வீட்டு சமையலறை உள்ளிட்ட பல இடங்களில் அவர் கசிப்பு காய்ச்சியுள்ளார்.
அவரிடமிருந்து 15லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு வடிப்பதற்கு பயன்படுத்தும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1