டில்லியில் பிரபலமான தெருவோர கடை பாபா கா தாபா என்ற உணவகத்தின் வீடியோ வைரலான நிலையில் அதை நடத்திய காந்தா பிரசாத்திற்கு லட்ச கணக்கில் உதவிகள் வந்தன. அதை வைத்து அவர் துவங்கிய ஓட்டல் ஓடாத நிலையில் அவர் மீண்டும் தெருவோர கடைகே வந்த சோக சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு இறுதியில் டில்லி மால்வியா நகரில் சிறிய அளவில் தன் மனைவியுடன் இணைந்து டிபன் சென்டர் நடத்தி வந்தவர் காந்தா பிரசாத், 80 வயது முதியவரான இவர் லாக்டவுனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டிபன் சென்டர் நடத்த முடியாமல் திண்டாடி வருவதாகவும் ஒரு பிரபலமான யூடியூபர் இவர் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் இவருக்கு உதவ நினைப்பவர்கள் அவரது வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்தும் வழியையும் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த வீடியோ வைரலான நிலையில் பலர் அந்த மூதியவர் மீது பரிதாபப்பட்டு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய துவங்கினர். இதற்கு முக்கிய காரணம் காந்தா பிரசாத் கண்ணீருடன் அந்த வீடியோவில் தனது கஷ்டங்களை பேசியிருந்தார். இந்த பணம் அவர் வங்கி லட்ச கணக்கில் குவிய துவங்கியது.
இதையடுத்து அந்த பணத்தில் ரூ5 லட்சத்தை எடுத்து தனியாக ஒரு கடையை வாடகைக்கு எடுத்து அதில் டிபன் சென்டர் போடலாம் என முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்து டிபன் சென்டரையும் துவங்கினார்.
ஆனால் துரதிஷ்டவசமாக அந்த டிபன் சென்டர் பிக்கப் ஆகவில்லை அவர் நடைபாதையில் போடும் கடைக்கு வரும் ஆட்கள் கூட இந்த கடைக்கு வரவில்லை இதனால் அவர் பெரும் நஷ்டத்தைசந்திக்க வேண்டியது இருந்தது. மாதம் முழுவதும் கடை நடத்தியும் ரூ40 ஆயிரம் தான் மொத்தமாக வசூலாகியுள்ளது. அதை வைத்து வாடகை, கரெண்ட் பில், சம்பளம், மூல பொருட்களுக்கான பணம் என செலவு செய்ய அவருக்கு கட்டுப்படி ஆகவில்லை.
இதையடுத்து அவர் அந்த கடையை மூட்டு மீண்டும் தனது பழைய நடைபாதை கடையையே நடத்த முடிவு செய்துவிட்டார். அதையடுத்து பழைய கடையில் உள்ள பாத்திரங்கள், சமைக்கும் பொருட்கள், சேர்கள் ஆகியவற்றை விற்றதில் அவருக்கு வெறும் ரூ 36 ஆயிரம் தான் கிடைத்தது.
When we talk about Make in India and #vocalforlocal it's our responsibility to help such vendors and small business.
If you live in Malviya nagar or nearby please try to eat here sometimes, it will only help this 80 year old sitting with his wife to earn some money & not begging pic.twitter.com/KwewheeePY
— Ashutosh Vashishtha (@iashutosh23) October 7, 2020
இது குறித்து காந்தா பிரசாத் கூறும் போது தான் கடை வைக்க வேண்டும் என தவறாக வழிநடத்தப்பட்டதாகவும், அதனால் தனக்க பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நல்லவேளையாக கிடைத்த பணத்தில் ரூ20 லட்சத்தை தனக்கும், தனது மனைவியின் எதிர்காலத்திற்கும் வங்கியில் வைத்திருப்பதாகவும், தற்போது மீண்டும் பழைய கடையையே நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.
இந்த விவகாரம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. காந்தா பிரசாத்திற்கு பணத்தை பெற்று தந்த யூடிபர் கவ்ரவ் வாசன் தான் இவருக்கு தனியாக கடை வைக்கும் ஐடியாவையும் கொடுத்துள்ளார். இந்த செய்தி வெளியானதிலிருந்து கவ்ரவ் வாசனை பலர் விமர்சித்து வருகின்றனர். ஒரே நாள் இரவில் லட்சாதிபதியான காந்தா பிரசாத் சில மாதங்களில் கடை போட்டு லாபம் கிடைக்காமல் ஏமாந்துள்ளார்.