25 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இந்தியா

உச்ச நீதிமன்ற பணியை பாராட்டி கடிதம் எழுதிய சிறுமி!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு 5ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் கடிதம் எழுதி நீதிபதியின் பாராட்டையும் அவரிடமிருந்து பரிசையும் பெற்றிருக்கிறார்.

அந்த கடிதத்தில், நான் லிட்வினா ஜோசப், கேரள மாநிலம் திரிசூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறேன். தி இந்து நாளேட்டில் தேசிய செய்திகள் பக்கத்தில், கொரோனா செய்திகளைப் படித்தேன். டெல்லியில் நடைபெற்ற கொரோனா மரணங்கள் குறித்தும் நாட்டின் பிற பகுதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து அறிந்தும் வேதனையடைந்தேன்.பின்னர் தொடர்ந்து செய்தித்தாள்வழியாக, மாண்புமிகு உச்ச நீதிமன்றம் இவ்விஷயத்தில் தலையிட்டிருப்பதை அறிந்து கொண்டேன். சாமான்ய மக்களின் துயரங்களையும், உயிரிழப்பையும் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் ஒக்சிஜன் விநியோகத்தை சீர்படுத்த உத்தரவிட்டதை தெரிந்துகொண்டேன். நீதிமன்ற உத்தரவால் இன்று நிறைய உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

நாட்டில் கொரோனா மரணங்களை குறைப்பதில் உச்ச நீதிமன்றம் பலனளிக்கும் நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டதையும் தெரிந்து கொண்டேன். மாண்புமிகு நீதிபதிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் மிகுந்த மகிழ்ச்சியடைவதுடன் பெருமிதம் கொள்கிறேன்.லிட்வினா ஜோசப். இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்து தலைமை நீதிபதி ரமணா, “உனது கடிதத்துடன், நீதிபதியின் பணியை சித்தரிக்கும் மனதுக்கு இதமான ஓவியமும் கிடைக்க பெற்றேன். நீ வருங்காலத்தில் நிச்சயமாக விழிப்புடன் கூடிய பொறுப்பான குடிமகளாக வளர்வாய்” என பரிசு அனுப்பி பாராட்டினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காதலனை விசம் வைத்து கொன்ற யுவதிக்கு தண்டனை ஒத்திவைப்பு: பெண்ணல்ல பிசாசு என சாடல்!

Pagetamil

ரூ.6 கோடி மதிப்பிலான நகைகளுடன் மகா கும்பமேளாவில் கவரும் தங்க பாபா!

Pagetamil

சயிப் அலி கானை கத்தியால் குத்தியவர் கைது: சிக்கியது எப்படி?

Pagetamil

இந்திய தேர்தல் குறித்து மன்னிப்பு கோரிய மெட்டா நிறுவனம்!

east tamil

“கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்ஜிஆர்” – தவெக தலைவர் விஜய் உருக்கம்

Pagetamil

Leave a Comment