பாடசாலை மாணவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து இணையவழி கற்கையை மேற்கொள்வதற்கான புதிய செயலி அடுத்த சில வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த செயலி, தற்போது பயன்பாட்டிலுள்ள சூம் போலவே இருக்கும். இலவச கட்டணத்துடன், இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
நேற்று நாடாளுமன்றத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இதனை தெரிவித்தார்.
கல்வி அமைச்சு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் இணைய வழி வகுப்புகளில் கலந்துகொள்வதில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து கவலைகளை எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கையிலேயே, நாமல் இந்த அறிவிப்பை விடுத்தார்.