விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக பங்கேற்று வருபவர் மணிமேகலை. அவர் அதற்குமுன்பு சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்தார். அதன் பிறகு விஜய் டிவிக்கு வந்த பிறகு காமெடியனாக மாறிவிட்டார். தற்போது அவருக்கு அதிகம் ரசிகர்களும் கிடைத்து இருக்கிறார்கள்.
தற்போது கொரோனா லாக்டவுனில் மணிமேகலை அவரது கணவர் உடன் கிராமத்தில் தான் நேரத்தை செலவிட்டு வருகிறார். அங்கு அவர் செய்யும் விஷயங்களை வீடியோவாக எடுத்து வெளியிட்டு வருகிறார். அதற்கு ரசிகர்களுடன் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் மணிமேகலையின் கணவர் ஹுசைன் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு மணிமேகலை ஒரு அழகி போட்டியில் பங்கேற்று இருக்கிறார், அந்த போட்டோவை தான் தற்போது பதிவிட்டு கிண்டல் செய்து இருக்கிறார் கணவர்.
‘ப்பா.. யார்ரா இந்த பொண்ணு இவ்ளோ மேக்கப் போட்டு’ என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். மணிமேகலையின் பதினோரு வருட பழைய போட்டோவை தேடி எடுத்து தான் ஒரு தீவிர மணிமேகலை ரசிகன் என நிரூபித்து இருப்பதாகவும் ஹுசைன் மேலும் கூறி உள்ளார்.