27 C
Jaffna
December 23, 2024
Pagetamil
உலகம்

உலக பெரும் பணக்காரர்களை உருவாக்கிய பல்கலைகழகங்கள்…

இந்த உலகில் பெரும் பணக்காரர்கள் எல்லாம் கல்லூரி படிப்பை கூட சரியாக முடிக்காதவர்கள் என நீங்கள் கேள்வி பட்டிருப்படிருப்பீர்கள். ஸ்டீவ் ஜாப்ஸ், பில்கேட்ஸ், மார்க் ஜூக்கர்பெர்க் ஆகியோர் எல்லாம் இப்படி கல்லூரி படிப்பை கூட சரியாக முடிக்காதவர்கள் என தெரியும். ஆனால் உலகில் பெரும் பணக்கார்களின் பட்டியலை வைத்து அவர்கள் படித்த இடங்களை பார்த்தால் பெரும்பாலும் 11 பல்கலைகழகங்களிலேயே அதிகம் பேர் படித்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஃபோர்ப்ஸ்

ஃபோர்ப்ஸ் நிறுவனம் உலகில் உள்ள 2775 பெரும் பணக்கார்களை பட்டியலிட்டு அவர்கள் தங்கள் இளங்கலை படிப்பை எங்கு படித்தார்கள் என ஆய்வு செய் துவங்கினர். இந்த ஆய்வில் தான் இந்த ஆச்சரியமான விஷயம் தெரிய வந்தது. அதன் படி இந்த பதில் நாம் உலகில் அதிக பணக்காரர்களை உருவாக்கிய பல்கலைகழகங்களின் பட்டியலை தான் பார்க்கப்போகிறோம்..

​ஹார்வேர்டு

உலகின் மிகவும் புகழ்பெற்ற பல்கலைகழகம் இது. உலகின் மிகப்பெரிய ஜாம்பவான் எல்லாம் இந்த பல்கலைகழத்துடன் ஏதோ வகையில் தொடர்பில் இருப்பார்கள். இந்த பல்கலைகழகத்தில் படித்த 29 பேர் இன்று உலகின் பெரும் பணக்கார்கள் பட்டியலில் இருக்கிறார்கள். உலகிலேயே அதிக பெரும் பணக்காரர்களை உருவாக்கிய பல்கலைகழகமாக ஹார்வேர்டு பல்கலைகழகம் திகழ்கிறது.

​பென்சில் வேனியா பல்கலைகழகம்

இந்த பல்கலைக்கழகம் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இருக்கிறது. இந்த பல்கலைக்கழகத்தில் படித்த 28 பேர் இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். இந்த பல்கலைகழகம் இரண்டாவது அதிக பெரும் பணக்காரர்களை உருவாக்கிய பல்கலைகழகமாக திகழ்கிறது, இதே இரண்டாவது இடத்தில் மற்றொரு பல்கலைகழகமும் இருக்கிறது.

​ஸ்டாண்ஃபோர்டு பல்கலைகழகம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள 2 இந்த பல்கலைகழகமும் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிக்கிறது. இந்த பல்கலை கழகம் மொத்தம் 28 உலக பெரும் பணக்காரர்களை உருவாக்கியுள்ளது.

மும்பை பல்கலைக்கழகம்

இந்த பட்டியலில் வரும் முதல் இந்திய பல்கலைகழகம் இது தான். இந்த பல்கலைக்கழகம் உலகின் 20 பெரும் பணக்காரர்களை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் உள்ள பெரும் பணக்கார்கள் பலர் இந்த பல்கலையில் படித்தவர்களாக தான் இருப்பார்கள்

​யேல் பல்கலைக்கழகம்

​மும்பை பல்கலைக்கழகம்

இந்த பட்டியலில் வரும் முதல் இந்திய பல்கலைகழகம் இது தான். இந்த பல்கலைக்கழகம் உலகின் 20 பெரும் பணக்காரர்களை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் உள்ள பெரும் பணக்கார்கள் பலர் இந்த பல்கலையில் படித்தவர்களாக தான் இருப்பார்கள்

​கார்னேல் பல்கலைக்கழகம்

இந்த பல்கலைக்கழகம் அமெரிக்காவின் நியூயார்க்கில் இருக்கிறது. இங்கு மிகச் சிறந்த கல்வி வழங்கப்படுவதாக உலக புகழ் பெற்றது. இந்த பல்கலைக்கழகத்தில் படித்த 18 பேர் இன்று உலக பணக்கார்களாக இருக்கின்றனர். இதனால் இந்த பட்டியலில் இந்த பல்கலைக்கழகம் 6வது இடத்தை பிடித்துள்ளது.

​சதர்ன் கலிஃபோர்னியா பல்கலைகழகம்

இந்த பல்கலைக்கழகம் அமெரிக்காவில் தான் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் 15 உலக பெரும் பணக்கார்களை உருவாக்கியுள்ளது. இது பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது.

​மாஸ்சூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்

இந்த பல்கலைக்கழகம் அமெரிக்காவில் தான் இருக்கிறது. இந்த பல்கலைக்கழகத்தில் படித்த 14 பேர் இன்று உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். இதனால் இந்த பல்கலைக்கழகம் இந்த பட்டியலில் 8 வது இடத்தை பிடித்துள்ளது.

​கொலம்பியா பல்கலைகழகம்

இந்த பல்கலைக்கழகம் அமெரிக்காவில் தான் இருக்கிறது. இது ஒரு தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் படித்த 11 பேர் இன்று உலக பெரும் பணக்காரர்களாக இருக்கிறார்கள். அதனால் இந்த பட்டியலில் 9 வது இடத்தில் இருக்கிறது இதோ போல 11 பேரை உருவாக்கி வேறு இரு பல்கலைகழகங்களும் உள்ளன.

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்

இந்த பல்கலைக்கழகம் அமெரிக்காவில் தான் இருக்கிறது. இதுவும் 11 உலக பணக்காரர்களை உருவாக்கியுள்ளது. இதனால் இதுவும் 9வது இடத்தை தான் பெறுகிறது.

​கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் – பார்க்லே

இந்த பல்கலைகழகமும் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் தான் இருக்கிறது. இந்த பல்கலைக்கழகத்தில் படித்த 11 பேர் இன்று உலக பணக்காரர்களாக இருக்கின்றனர். இதனால் இதுவும் 9வது இடத்தை பெறுகிறது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

Pagetamil

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

east tamil

பிரான்ஸை உலுக்கிய பாலியல் வல்லுறவு வழக்கு: சொந்த மனைவியை கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய கணவன், 50 ஆண்களுக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

துரோகம் செய்த காதலி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை: காதலனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு!

Pagetamil

Leave a Comment