நீதிமன்ற அவமதிப்பு மற்றும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதாக, ஆளுந்தரப்பு ஆதரவு பத்திரிகையாளர் சமுதித்த சமரவிக்ரம மீது முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நிகழ்வுகள் அமைப்பாளர் சந்திமல் ஜெயசிங்கவினால் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தனக்கும், தனது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கும் பிணை வழங்க நீதிமன்றம் எடுத்த முடிவை விமர்சித்து நீதித்துறையை அவமதித்ததற்காக ஒரு முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், நீதிமன்ற அமர்வுகள் மீண்டும் தொடங்கியதும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
யூடியூப் நேர்காணலில் முகக்கவசம் இல்லாமலும், சமூக இடைவெளியை பேணாமலும் நிகழ்ச்சியை நடத்தியதன் மூலம், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக சமுதித்த சமரவிக்ரம மீது மற்றொரு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.