பாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகருக்கு ஆதரவாக பேசியுள்ள நடிகை யாஷிகாவுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான தொடர் ‘நாகினி’. இந்த தொடரில் 3வது சீசனில் நடித்து பிரபலமானவர்தான் பேர்ல் வி புரி. இந்தியில் ஒளிபரப்பாகும் பல முக்கிய தொடர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். பிசியாக நடித்து வரும் இவர் மீது 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சில தினங்களுக்கு முன்பு பாலியல் குற்றச்சாட்டு ஒன்று எழுந்ததது.
இதையடுத்து ஏமாற்றப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் பேர்ல் வி புரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் அத்துமீறலில் பேர்ல் வி புரி ஈடுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து பேர்ல் வி புரி உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் பேர்ல் வி புரிக்கு சில நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த்தும் பேர்ல் வி புரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பேர்ல் வி புரி மிகவும் அமைதியாக பேசும் மனிதர். எனக்கு தெரிந்த அன்பானவர்களில் இவரும் ஒருவர். உண்மை வெளிவரும் வரை காத்திருப்போம். விரைவில் அவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார். பாலியல் குற்றச்சாட்டால் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு யாஷிகா ஆதரவு தெரிவித்திருப்பதற்கு ரசிகர்கள் கடும் கண்டம் தெரிவித்துள்ளனர்.