தனது சைஸை கேட்ட நபருக்கு செருப்படி பதில் ஒன்றை நடிகை பார்வதி நாயர் கொடுத்துள்ளார்.
தமிழ், கன்னடம், மலையாளம், ஆகிய மூன்று மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை பார்வதி நாயர். கடந்த 2105ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். சிறிய கதாபாத்திரம் என்றாலும், அவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
மலையாள நடிகையான இவர், ’உத்தம வில்லன்’, ‘என்கிட்ட மோதாதே’, ‘நிமிர்’, ‘மாலை நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது வைபவ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆலம்பனா’ படத்தில் நடித்து வருகிறார். இவரின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதால் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
சமூக நலனில் அக்கறைக்கொண்ட இவர், சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடியாக குரல் கொடுத்து வருகிறார். அதேநேரம் தனது ரசிகர்களிடம் சமூக வலைத்தளம் வாயிலாக பேசியும் வருகிறார். அந்த வகையில் பேசும்போது, நபர் ஒருவர் உங்களுடைய சைஸ் என்ன என கேட்டார். அதற்கு பதிலளித்த பார்வதி நாயர், எனது ஷூ சைஸ் 37 என்றும், டிரஸ் சைஸ் எஸ் என கூறி அந்த நபரை அதிர வைத்தார். நடிகை பார்வதி நாயர் தைரியமான பதிலடிகளுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.