26.5 C
Jaffna
January 23, 2025
Pagetamil
உலகம்

சூடானில் இருதரப்பினரிடையே பயங்கர மோதல்: பாதுகாப்பு படையினர் குவிப்பு!

சூடான் நாட்டில் இருதரப்பினருக்கு இடையே நடந்த பயங்கர மோதலில் 36 பேர் உயிரிழந்தனர்.

வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நாட்டில் 2013ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நிலவி வந்தது. இந்த போரால் பழங்குடியின மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு வேறுபகுதிகளுக்கு தஞ்சம் அடைந்தனர்.

ஆனால் தற்போது போர் சற்று குறைந்ததையடுத்து இடம்பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த பகுதிகளுக்கு திரும்பியவாறு உள்ளனர். ஆனால் ஏற்கனவே கைவிடப்பட்ட பகுதிகளை வேறு சிலர் கைப்பற்றி விவசாயம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நிலத்தின் சொந்த உரிமையாளர்களுக்கும், போரால் கைவிடப்பட்ட நிலத்தை கைப்பற்றியவருக்கும் இடையே உரிமைச்சண்டை அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு டர்பர் மாகாணத்தின் உம் டஃப்யூ பகுதியில் வசித்துவரும் பழங்குடியின ஆப்ரிக்க மக்களுக்கும், மற்றொரு தரப்பான அரபு மக்களுக்கும் இடையே சனிக்கிழமை முதல் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி வருகின்றனர்.

இந்த மோதலில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. மோதல் தொடர்ந்து சுற்றுவட்டாரப்பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இந்த மோதலில் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமந்துள்ளனர். மோதல் சம்பவங்கள் மேலும் நடைபெறுவதை தடுக்க அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மூத்த ஹிஸ்புல்லா தலைவர் சுட்டுக்கொலை

Pagetamil

தாய்வானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 15 பேர் காயம்

east tamil

அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக டிரம்ப் அறிவிப்பு

east tamil

ஹமாஸ்ஸினால் விடுவிக்கப்பட்ட 3 பணயக்கைதிகள் இஸ்ரேலில் இணைவு

east tamil

47வது அமெரிக்க ஜனாதிபதியாக பதியேற்கும் டொனால்ட் ட்ரம்ப்

east tamil

Leave a Comment