பேமிலி வெப் சீரிஸ் பார்த்துள்ள நடிகை ராகுல் ப்ரீத் சிங் சமந்தா மற்றும் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸ் ஜூன் 4-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. இந்த வெப் சீரிஸில் சமந்தாவும் இணைந்துள்ளார். ராஜ் மற்றும் டீகே இருவருந் இயக்கத்தில் வெளியான இந்த வெப் சீரிஸுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மனோஜ் பாஜ்பாயி, சமந்தா, தமிழ் நடிகர்கள் என அனைவரும் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
தற்போது பேமிலி மேன் சீரிஸைப் பார்த்த நடிகை ராகுல் ப்ரீத் சிங் சமந்தா மற்றும் குழுவினரை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
“பேமிலி மேன் சீசன் 2 பார்த்துவிட்டேன். அனைவரும் பயங்கரமாக அருமையாக பணியாற்றியுள்ளனர். மனோஜ் பாஜ்பாய் சீரிஸில் நீங்கள் எவ்வளவு சிறப்பாக நடித்திருந்தீர்கள் என்று சொல்வதற்கு என்னிடம் போதிய வார்த்தைகள் இல்லை.
சமந்தா வேற லெவல் செய்துவிட்டார். நெருப்புப் பெண்மணி. ராஜி கதாபாத்திரத்தில் அற்புதமாக பொருந்தியுள்ளீர்கள். என்னைத் தவிர இப்போது என் மொத்தக் குடும்பமும் உங்கள் ரசிகராக மாறிவிட்டனர். இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளீர்கள்.” என்று தெரிவித்துள்ளார்.