கொரோனா தொற்று இன்று உலகில் பலரது உயிர்களை பறித்துள்ளது. இதில் பலர் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்து தவிக்கின்றனர். சில இடங்களில் முதியவர்கள் இறந்திருக்கின்றனர்.சில இடங்களில் சிறுவர்கள் இறந்திருக்கின்றனர். சில இடங்களில் பெற்றோர்கள் இறந்து குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டனர். இப்படி பலரது வாழ்வில் பல்வேறு விதமான சோகங்களை உருவாக்கிவிட்டது கொரோனா வைரஸ்.
இப்படியாக உ.பி மாநிலம் ஷாம்லி பகுதியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, தாத்தா, பாட்டிய ஆகிய பேரும் கொரோனாவால் உயிரிழந்துவிட்டனர். இதனால் அவர்களின் குழந்தைகளான 13 வயதான சமர்பீட், 12 வயதான மீனா, 11 வயதான சங்கர் ஆகியோர் தற்போது அனாதைகளாக வீட்டில் இருக்கின்றனர்.
இது குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அரசு சார்பில் அவர்களை விடுதியில் சேர்க்க முன்வந்தனர். ஆனால் 13 வயதான மூத்த மகன் சமர்பீட் தாங்கள் விடுதிக்கு செல்ல விருப்ப வில்லை. நாங்கள் தனியாகவே வீட்டிலிருந்து கொள்கிறோம். என் சகோதர சகோதரிகளை நானே வளர்க்கிறேன் என கூறியுள்ளான்.
விருப்பமில்லாதவர்களை விடுதியில் சேர்க்க முடியாது என்பதால் அரசு அதிகாரிகள் அந்த குழந்தைகளின் உறவினர்களில் ஒருவரை இந்த குழந்தைகளின் பாதுகாவலராக நியமித்துஅவர்களை தினமும் சென்று கவனித்து வரும் படி கேட்டு கொண்டுள்ளார். இவர்கள் பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகள் இருந்த வீட்டிலேயே தற்போது இந்த மூன்று சிறுவர்கள் மட்டும் இருக்கின்றனர். மேலும் இவர்களின் வாழ்வாதாரத்திற்காக அரசு உதவி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள மக்களும் அந்த 3 குழந்தைகளையும் தங்கள் வீட்டு குழந்தைகளாக பார்த்துக்கொள்வோம் என மாவட்ட கலெக்டருக்கு உறுதியளித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெரியவர்களும் கொரோனாவிற்கு பலியாகி 3 குழந்தைகள் தற்போது ஆதரவின்றி தவிப்பது பலரை கண்கலங்க வைத்து விட்டது. அதிலும் அந்த மூத்த மகன் தன் சகோதரியையும் சகோதரனையும் தானே வளர்ப்பதாக முடிவெடுத்தது பலரை அதிசயிக்க வைத்துள்ளது.