அவுஸ்திரேலியாவில் பரவும் புதிய வகை கொரோனா இலங்கையிலிருந்து சென்றவரால் பரவியிருக்கலாம்!

Date:

அவுஸ்திரேலியாவின் மெல்பர்னில் புதியவகை டெல்ட்டா (Delta) கொரோனா வைரஸ் தொற்று, இலங்கையிலிருந்து சென்ற ஒருவர் மூலமே பரவியிருக்கலாமென கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து வந்து விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நபருடன் குறித்த பரவல் தொடர்புபடுவது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பதில் பிரதமர் ஜேம்ஸ் மெர்லினோ தெரிவித்துள்ளார்.

மே 8ம் திகதி இலங்கையிலிருந்து வந்த நபருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட இந்நபர் 14 நாட்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு அவருக்கு முழுமையாக குணமடைந்த பின்னர் மே 23ம் திகதி வீடுசெல்ல அனுமதிக்கப்பட்டார்.

இதன் பின்னர் வடக்கு மெல்பேர்னில் 2 குடும்பங்களில் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

இலங்கை சென்று வந்தவருக்கும், அந்த குடும்பங்களிற்குமிடையில் எதேனும் தொடர்புள்ளதா என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க முற்றுகையை கடந்து சென்ற ஈரானிய கப்பல்கள்

அமெரிக்க இராணுவத் தடையையும் மீறி, ஈரானியத் துறைமுகங்களிலிருந்து பயணித்த குறைந்தது இரண்டு...

மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி...

பந்து ஈரானின் கைகளில்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்