யாழ்ப்பாணத்திற்கு இந்த வாரம் தடுப்பூசி வராது!

Date:

யாழ்ப்பாணத்திற்கு இரண்டாம் கட்டத்துக்குரிய தடுப்பூசிகள் இந்த வாரம் அல்லது தற்போதைக்கு வழங்கப்படமாட்டாது என கொழும்பு சுகாதார அமைச்சு வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு நேற்று மதியம் திடீரென அறிவித்துள்ளது.

இலங்கைக்கு இந்த மாதம் முதல் வாரத்தில் 20 இலட்சம் சினோஃபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் நிலையல் அவற்றில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு இரண்டாம் கட்டத்துக்கு வழங்கப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றுவது தொடர்பில் ஆராயும் கூட்டம் இடம்பெற்று கொண்டிருந்தபோது இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் இந்தவாரமோ அல்லது இப்போதைக்கோ வழங்கப்படமாட்டாது என்ற விடயம் கொழும்பு சுகாதார அமைச்சு அதிகாரிகளால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தடுப்பூசி திட்டத்துக்கு அமைவாக 14 இலட்சம் பேர், சினோஃபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு இரண்டாவது டோஸ் ஏற்றுவதற்கே இலங்கைக்கு நாளை (09) வரும் 10 லட்சம் தடுப்பூசிகளும் பயன்படும். அதேபோன்று நேற்று முன்தினம் வந்த 10 லட்சம் தடுப்பூசிகளில் 4 லட்சம் தடுப்பூசிகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சட்டப்படியே ஞானசாரரை மன்னித்தேன்

அரசியலமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியே, ஞானசார தேரருக்குத் தான் பொதுமன்னிப்பு...

பசில் ராஜபக்ஷவிற்கு பிடியாணை!

இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்...

அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்

இலங்கை நாட்டைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவூதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்