அத்தியாவசிய சேவைகள் என்ற போர்வையில் கொழும்புக்குள் நுழைய முயன்ற 800 க்கும் மேற்பட்டோர் நேற்று பொலிசாரால் திருப்பி விடப்பட்டனர்.
நேற்று நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 28,784 வாகனங்கள் கொழும்புக்குள் நுழைந்தன. அவற்றில் 4,802 வாகனங்கள் சுகாதார சேவையை சேர்ந்தவை.
நேற்று, பயண தடையை மீற முயன்ற 803 பேருக்கு அறிவுறுத்தப்பட்டு திருப்பி விடப்பட்டதாக டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதேவேளை, மாகாணங்களிற்கிடையிலான கட்டுப்பாட்டை மீற முயற்சித்த 54 வாகனங்களில் 107 பேர் திருப்பி விடப்பட்டுள்ளனர்.
இன்று நிறங்களிலான ஸ்டிக்கர் ஒட்டப்படுவதால், கொழும்புக்குள் நுழையும் இடங்களில் நெரிசல் ஏற்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1