ஓவியர் இளையராஜாவின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி!

Date:

பிரபல ஓவியர் எஸ். இளையராஜா மறைவிற்கு திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் மிக பிரபல ஓவியர்களில் ஒருவர் எஸ்.இளையராஜா. திராவிடப் பெண்கள் என்ற தலைப்பின் கீழ் இவர் வரைந்துள்ள தமிழகப் பெண்களின் தத்ரூபமான ஓவியம் மிகவும் பிரபலம். அவர் இயக்குனர் பார்த்திபன் இயக்கிய இவன் படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். அந்தப் படத்தில் நடிக்கவும் செய்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 41. இவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள பதிவில் “இயல்பான நிகழ்வுகளை மண்ணுக்கேற்ற வாழ்வியல் விழுமியங்களோடு சிந்தித்து, துல்லியத்தன்மையோடு ஓவியங்களாகத் தீட்டி, அதற்கு உயிரூட்டும் வல்லமை கொண்ட ஓவியர் அன்புத்தம்பி இளையராஜா கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆட்பட்டு உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன்.புகைப்படமா அல்லது ஓவியமா என வேறுபாடு காண இயலாத அளவிற்கு நுட்பமான படைப்புகளைத்தந்த தம்பி இளையராஜா அவர்கள் தனது ஓவியங்களின் வழியே காலங்கள் கடந்தும் வாழ்வார்! அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், ஊடக உலகினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

“ஒரு நிகழ்வில் என்னைச் சந்திக்க ஓவியர் இளையராஜா 10 நிமிடங்களில் Portrait வரைந்து கொடுத்தார்.’இவன்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்ற வாய்ப்பு கொடுத்ததோடு, ‘நாளைய இயக்குநர்கள்’என்று பெயர் போட்டு இளையராஜாவை உற்சாகப்படுத்த,பின் உலக புகழ் பெற்று இன்று இவ்வுலகைப் பிரிந்து/வருத்தம்” என்று நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

“இது புகைப்படம் என்று நினைத்தவர்கள் யாரெல்லாம் ? இளையராஜா (ஓவியர்) என்ற அற்புதமான கலைஞர் வரைந்த ஓவியம் இது. இன்று அவர் நம்மை விட்டுப் பிரிந்து சென்றது மிகவும் வருத்தமளிக்கிறது. கிராமியப் பெண்களையும் நம் வாழ்க்கை முறையையும் அவர் பதிவு செய்த விதம் பேரழகு” என்று பாடலாசிரியர் விவேக் தெரிவித்துள்ளார்.

“எனக்கு பிடித்த கலைஞர்களில் ஒருவர் தற்போது இல்லை என்று நம்ப முடியவில்லை. அவரது படைப்புகளில் ஒன்றைப் பெறுவது எனது நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. சீக்கிரம் சென்றுவிட்டார். ஆன்மா சாந்தியடையட்டும்” என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

யாழ் கோயில் திருவிழாவில் அதிசக்தி மின்விளக்குகள்: கண் பாதிப்பால் 25 பேர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச்...

இமாம் கஸ்ஸாலி வித்தியாலய மாணவர்களுக்கு அமீர் மேர்சா பொது நூலகத்தின் இலவச அங்கத்துவம் வழங்கி வைப்பு

நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலய மாணவர்களுக்கு நிந்தவூர் அமீர் மேர்சா பொது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்