சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் பூஜையுடன் துவக்கம்!

Date:

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘டான்’ படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி என்பவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து வருகிறார். ‘டாக்டர்’ படத்தில் நடித்துள்ள ப்ரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனத்துடன் இணைந்து முதல் பிரதி அடிப்படையில் சிவகார்த்திகேயனின் எஸ்.கே. ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

கொரோனா ஊரடங்கால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் குறைந்ததும் படத்தின் மீதி பணிகள் துவங்கப்படும் என்று கூறப்படுகிறது.

தற்போது டான் படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் வாங்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் ஒப்பந்தம் முடிந்துவிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியானால் டான் படம் தியேட்டரில் வெளியான பின்பு ZEE5 ஓடிடி தளத்திலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

நெல்சன் திலீப்புகுமார் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படமும் ஓடிடி-யில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ஷம்போ பக்கெட்டுகள்

கடல் மார்க்கமாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 5,386 ஷாம்போ பக்கெட்டுகள்...

வீரவன்சவின் சகோதரருக்கு விளக்கமறியல்

ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரசாங்க வாகனங்களை...

வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகளைக் குறிவைத்த திருடர்கள் சிக்கினர்

காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்