எப்படியிருக்கிறீர்கள் டார்லிங்?: அயல்வீட்டு கணவனிற்கு பெண் அனுப்பிய எஸ்.எம்.எஸ்; 8 பேர் வைத்தியசாலையில்!

Date:

இரண்டு அயல்வீடுகளிற்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 8 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குடும்ப பெண்ணொருவர், அயல்வீட்டு ஆணுக்கு, கோஹ்மத சுது” (எப்படியிருக்கிறீர்கள் அன்பே?) என்று அனுப்பிய குறுஞ்செய்தியை தொடர்ந்தே இந்த மோதல் நடந்தது.

பொரளை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

இளம் குடும்ப பெண், தனது பக்கத்துக்கு வீட்டுக்காரருக்கு “கோஹ்மத சுது” என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதை அவரது 35 வயது கணவர் கண்டறிந்தார்.

அண்டை வீட்டிலுள்ள 25 வயது குடும்பஸ்தருடன் தனது மனைவிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளதாக சந்தேகித்த கணவன், மனைவியிடம் இது பற்றி கேட்டிருக்கிறார்.

எனினும், அது தவறுதலாக அனுப்பப்பட்டதாக மனைவி கூறியிருக்கிறார்.

எனினும், இந்த பதிலால் திருப்தியடையாத கணவன், பக்கத்து வீட்டு காரரிடம் சென்று, “எனது மனைவியுடன் நீ கள்ள உறவு வைத்திருக்கிறாயா” என்று கேட்டிருக்கிறார்.

அதனை அடுத்து, இருவருக்கு இடையில் சண்டை ஏற்பட, அது இரண்டு குடும்பத்தினரும் பங்கேற்ற குடும்ப சண்டையானது. குறுஞ்செய்தி அனுப்பிய பெண்ணின் கணவருக்கும், குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட குடும்பத்தருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இந்த மோதலில் மொத்தம் 8 பேர் காயமடைந்தனர்.

இரண்டு வீடுகளையும் சேர்ந்த கணவர்கள் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளார்கள் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

spot_imgspot_img

More like this
Related

பாடசாலைக்கால காதலர்களின் உடல் ஒன்றாக அடக்கம்

ஹெனேகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம்ஜோடி உயிரிழந்துள்ளது. கடந்த 9ஆம் திகதி இந்த...

மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்து ஓட்டுநருக்கு விளக்கமறியல்

கெஸ்பேவ-கொழும்பு வீதியில் உள்ள மிரிஸ்வத்த பகுதியில் 'மெட்ரோ' (Metro) பேருந்துடன் வேண்டுமென்றே...

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்