இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் வருடாந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில்லையென முடிவு செய்துள்ளனர்.
இலங்கை வீரர்கள் 24 வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமரட்ண வெளியிட்டுள்ள அறிக்கையில், வருடாந்த கிரிக்கெட் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை வீரர்கள் கடுமையாக நிராகரிக்கின்றனர் என்றுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளால் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வருடாந்த ஒப்பந்தத்தில் வீரர்களின் மதிப்பீடு வெளிப்படையானது அல்ல என்றும், தனிப்பட்ட வீரருக்கு மதிப்பெண் முறை குறித்து அறிவிக்கப்பட்டு அதை ஏற்றுக்கொள்ளும்படி செய்ய வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
வருடாந்த கிரிக்கெட் ஒப்பந்தம் அநியாயமானது, நியாயமற்றது மற்றும் தன்னிச்சையானது என்றும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட வீரர்கள் கடுமையாக மறுத்துவிட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.