மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரில் யுவதி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் காணாமல் போயுள்ள ஏனைய 3 பேரை தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை அவர்களது மகள் (23) மற்றும் மகன் (29) ஆகியோர் இவ்வாறு காணாமல் போயிருந்த நிலையில், 23 வயதான மகள் மாத்திரம் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் கேகாலையின் அல்கம பிரதேசத்தில் அதிகளவாக 197.5 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




