நடிப்பதற்கு வாய்ப்பு கொடுப்பதாகக் கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நாகின் 3 சீரியல் நடிகர் கைது செய்துள்ளார்.
பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நிஷா ராவல் மற்றும் கரண் மெஹ்ரா டிவி நட்சத்திர தம்பதிகளில் நிஷா அளித்த புகாரின் பேரில் கரண் மெஹ்ரா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், மேலும் ஒரு சீரியல் நடிகர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுப்பதாகக் கூறி 5 நபர்களுடன் சேர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்ததாக நாகின் 3 புகழ் பேர்ல் வி பூரி கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி தனது தாயுடன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளதாகவும், நாங்கள் பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளதாக போலீஸ் அதிகாரி சஞ்சய் பாட்டீல் தெரிவித்துள்ளார்.