ஓட்டமாவடி தவிசாளருடன் திறப்பு விழாவில் சமூகம் கொடுத்த மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தவிசாளருக்கு வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் பிகாரம் ஓட்டமாவடி பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் சபை உறுப்பினர்களும் பரிசோதனை இடம்பெற்றன.
கடந்த மே மாதம் 31ஆம் திகதி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் ஒரு பகுதியை கொரோனா சிகிச்சை பிரிவாக திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன், மற்றும் பிள்ளையானின் ஆதரவாளர்கள் என பலர் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளருடன் நெருக்கமாக பக்கத்தில் நின்றனர்.
அப்படியானால் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபருக்கு தற்போது கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏன் அவருடன் சமூகம் கொடுத்தவர்களுக்கு இதுவரை பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளவில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.




