ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தை சேர்ந்தவர் பிரசாந்த், இவர் தெலுங்கானா மாநிலம் ஐதிராபாத்தில் ஐடி ஊழியாராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2017ம் ஆண்டு ஒன்லைன் சாட்டிங் மூலம் ஒரு பெண் ஐடியுடன் பேசி பழகியுள்ளார். நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியுள்ளது. இந்த காதல் முற்றிப்போக இவர் தன் காதலியை நேரில் சந்திக்க பாகிஸ்தான் செல்ல முடிவு செய்தார்.
இதையடுத்து அவர் பாகிஸ்தான் செல்வதற்காக விசா கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் சட்ட விரோதமாக பாகிஸ்தான் செல்ல முடிவு செய்து பாகிஸ்தானிற்கும் சென்றார். ஆனால் அங்கு சென்று அவர் தன் காதலியை சந்திக்கும் முன்பு அவர் போலீசில் சிக்கிக்கொண்டார்.
பாகிஸ்தான் போலீசார் இவரை சட்ட விரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததற்காக கைது செய்தனர். இவர் பாகிஸ்தான் செல்லும் முன்பு வேலை காரணமாக பாகிஸ்தான் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். வீட்டை விட்டு வேலைக்கு சென்ற மகன் இரண்டு ஆண்டுகளாக தொடர்பு கொள்ளவேயில்லை. இதனால் பிரசாந்தின் தந்தை பாபுராவ் சைராபாத் போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில் 2019ம் ஆண்டு தான் பாகிஸ்தானில் சிக்கி விட்டதாகவும் தன்னால் இந்தியா திரும்ப முடியவில்லை எனவும் வீடியோ ஒன்றை பதிவு செய்து அதை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார். வீடியோவை அவரே பதிவிட்டாரா? அல்லது அவருக்காக வேறு யாரும் பதிவிட்டனரா என்பது தெரியவில்லை. அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.
அந்த வீடியோவை ஆதரமாக வைத்து கமிஷ்னர் இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினர். அதை வைத்து வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு நிலமையை சொன்னது. அவர்கள் பாகிஸ்தான் அரசுடன் பேசி பாகிஸ்தான் சிறையில் உள்ள பிரசாந்தை மீட்க உதவி செய்தனர்.
இறுதியில் பிரசாந்தை பாகிஸ்தான் இந்தியாவில் ஒப்படைக்க ஒப்புக்கொண்டுவிட்டது. அதன் பின் வாகா எல்லையில் பிரசாந்த் இந்திய அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். தன் பின் பிரசாந்த் சொந்த ஊருக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
காதலியைத்தேடி சட்ட விரோதமாக பாகிஸ்தான் சென்ற இளைஞர் 4 ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரசாந்திற்கு அவனது கிராமத்தில் பெரும் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. இதற்கிடையில் பிரசாந்தின் பாகிஸ்தான் காதலியை என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அவர் உண்மையிலேயே பெண் தானா அல்லது பேக் ஐடி யா? என்பது தெரியவில்லை.