27.4 C
Jaffna
December 15, 2024
Pagetamil
விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப்பில் அறிமுகமாகும் தினேஷ் கார்த்திக்; வீரராக அல்ல!

இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது. வரும் ஜுன் 18ம் திகதி  முதல் 22ம் திகதி வரை நடக்கும் இந்தப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்தப் போட்டிக்கு ஆயத்தமாகும் விதமாக, அந்த அணி இங்கிலாந்துடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.

இந்தத் தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய அணி, இங்கிலாந்திற்கு புறப்பட்டு சென்றுள்ளது. உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நேரில் காண குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரசிகர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஆங்கில தொலைக்காட்சியின் வர்ணனையாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் பணியாற்ற உள்ளார். இதனால், அவர் விரைவில் இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்”: டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி!

Pagetamil

‘விடை பெறுகிறேன்!’ – ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

Pagetamil

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆண்: மருத்துவ அறிக்கையில் உறுதி

Pagetamil

ஐபிஎல் 2025: தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்!

Pagetamil

Leave a Comment