‘பத்து தல’ திரைப்படத்தின் பாடல் பதிவு பணிகளை துவங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்!

Date:

‘சில்லுனு ஒரு காதல்’ கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘பத்து தல’ திரைப்படத்திற்கான பாடல் பதிவு பணிகளை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்டது. இன்னும் ஒருசில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட உள்ளது. கொரோனா ஊரடங்கு முடிவடைந்த பின் படக்குழுவினர் அதற்கான பணிகளில் இறங்குவார்கள். ‘மாநாடு’ திரைப்படத்தை தொடர்ந்து ‘பத்து தல’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கான பணிகளில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் பணிகள் தொடங்கி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தமிழிலும் இயக்குனர் நரதனே இயக்கி வந்தார். தமிழ் ரீமேக் தாமதமானதால் கன்னடத்தில் யாஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்க கமிட் ஆனார் நரதன். இதனால் ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து படத்தின் மீதான பிரச்சினைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டு,படத்தை இயக்க ‘சில்லுனு ஒரு காதல்’ இயக்குநர் கிருஷ்ணா கமிட் ஆனார். ‘பத்து தல’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிலம்பரசன், கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், டிஜே, மனுஷ்ய புத்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் முடிவடைந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இந்த படத்திற்கான இசை பதிவு வேலைகளை ஏ.ஆர்.ரஹ்மான் துவங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தில் இடம்பெறும் 2 பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு செய்துவிட்டதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

மேலும் ஏ.ஆர்.ரஹ்மான். விரைவில் அடுத்த பாடல்களை முடிக்க பணிபுரிந்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கிருஷ்ணா இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த அணைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டடித்தன. இதனால் பத்து தல திரைப்படத்தின் இசை ஆல்பமும் ரசிகர்களுக்கு செம்ம ட்ரிட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

ஜனாதிபதி விருதைப் பெற்ற சாய்ந்தமருது மாணவன் அன்சார் முஹம்மட் சினான்

இலங்கை சாரணர் சங்கத்தின் உயரிய கௌரவ விருதான ஜனாதிபதி சாரணர் விருதை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்