25.7 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இலங்கை

ரிஷாத் வழக்கிலிருந்து மேலுமொரு நீதிபதி விலகல்!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்து தடுப்புக்காவல் வைத்திருப்பதை சட்டவிரோதமானதாக அறிவிக்க கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதி யசந்த கொடகொட விலகியுள்ளார்.

ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த மனு இன்று (4) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட போது, இந்த முடிவை அறிவித்தார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த மனுக்களை பரிசீலிப்பதிலிருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி யசந்த யசந்த கொடகொட கூறினார்.

இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரிய, மற்றும் நீதிபதிகள் எஸ்.துரைராஜா மற்றும் யசந்தா யசந்த கொடகொட ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு முன் விசாரணைக்கு வந்தது.

அதன்பிறகு, இந்த மனுக்களின் விசாரணையை உச்ச நீதிமன்றம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

இந்த மனுக்கள் 28 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட ஆயம் முன் விசாரிக்கப்பட்டபோது, ​​நீதியரசர் ஜனக் டி சில்வாவும் தனிப்பட்ட காரணங்களால் மனுக்களை பரிசீலிப்பதில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போயா தினத்தில் மதுபான விற்பனை – ஒருவர் கைது

east tamil

அடுத்த மாதம் முதல் புதிய அடையாள அட்டைகள் டிஜிட்டல் வடிவில்

east tamil

கிளிநொச்சியில் கொதித்தெழுந்த சிவசேனை

Pagetamil

ரயிலில் தவறவிடப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

east tamil

முல்லைத்தீவில் வினோதமான திருட்டு

east tamil

Leave a Comment