நடிகை பூஜா ஹெக்டே 100 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அளித்து உதவியுள்ளார்.
கொரோனா தொற்றால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பலர் தாமாக முன்வந்து உதவுகின்றனர். முக்கியமாக திரைத்துறை பிரபலங்கள் பலர் மக்களுக்கு உதவி வருகின்றனர்.
தற்போது நடிகை பூஜா ஹெக்டே 100 குடும்பங்களுக்கு அத்திவாசியப் பொருட்கள் ஏற்பாடு செய்துள்ளார். அந்த 100 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவியுள்ளார் . இதையடுத்து அவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
கடந்த மாதம் பூஜா ஹெக்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டார். தற்போது நுரையீரல் திறனை அதிகரிக்க உதவும் வகையில் சுவாச பயிற்சிகள் குறித்து கற்றுக்கொடுக்க யோகா பயிற்சியாளர் ஒருவரை அமர்த்தியுள்ளார்.
பூஜா ஹெக்டே தற்போது விஜய் உடன் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். பிரபாஸ் உடன் ‘ராதே ஷ்யாம்’ மற்றும் சல்மான் கான் உடன் ‘கபி ஈத் கபி தீபாவளி’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.